உயர்கல்வித் துறை மானியக் கோரிக்கை விவாதத்துக்கு முன்னர் முதல்வரைச் சந்தித்த அமைச்சர் பொன்முடி
உயர்கல்வித் துறை மானியக் கோரிக்கை விவாதத்துக்கு முன்னர் முதல்வரைச் சந்தித்த அமைச்சர் பொன்முடி

மாணவிகளுக்காக தனி ஓய்வறை! அரசு காட்டும் கரிசனம்!

அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கையில் 20 சதவீதம் இடங்கள் அதிகரிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சட்டப்பேரவையில் இன்று உயர்கல்வித் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின்போது, துறை அமைச்சர் பொன்முடி 15 அறிவிப்புகளை வெளியிட்டார்.

அப்போது, “ அதிக மதிப்பெண்கள் பெற்றிருந்தபோதிலும் பல மாணவர்கள் கல்லூரிகளில் சேர்க்கைபெற வழியில்லாத நிலை உள்ளது. இவர்கள் வேறு கல்லூரிகளிலும் சேர வாய்ப்பில்லாத நிலையில் இந்தக் கல்வியாண்டு முழுவதும் அவர்களுக்கு வீணாகும் நிலை ஏற்பட்டுள்ளது. இதைக் கருத்தில்கொண்டு 2024-25ஆம் கல்வியாண்டில் அரசுக் கல்லூரிகளில் 20 சதவீதமும், அரசு உதவிபெறும் கல்லூரிகளில் 15சதவீதமும், சுயநிதி கல்லூரிகளில் 10 சதவீதமும் மாணவர் சேர்க்கை அதிகரிக்கப்படுகிறது.” என்று அமைச்சர் தெரிவித்தார்.

கோவை, சேலம், பர்கூர் அரசுப் பொறியியல் கல்லூரிகளில் மூன்று கோடி ரூபாய் செலவில் செயற்கை நுண்ணறிவு- எந்திரனியல் ஆய்வகம் அமைக்கப்படும் என்றும் அமைச்சர் அறிவித்தார்.

மாநிலத்தில் உள்ள அனைத்து அரசு கலை, அறிவியல், கல்வியியல் கல்லூரி மாணவிகளுக்காக தலா 5 இலட்சம் ரூபாயில் 171 கல்லூரிகளில் தனி ஓய்வறை அமைக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

logo
Andhimazhai
www.andhimazhai.com