21 அ.தி.மு.க. எம்.எல்.ஏ.களின் பதவி தப்பியது!

சட்டப்பேரவைத் தலைவர் ஜேசிடி பிரபாகர்
சட்டப்பேரவைத் தலைவர் ஜேசிடி பிரபாகர்
Published on

அ.தி.மு.க. சட்டப்பேரவை உறுப்பினர்கள் 21 பேரின் பதவி கட்சித்தாவல் சட்டத்தின்படி பறிக்கப்படாது என பேரவைத்தலைவர் ஜேசிடி பிரபாகர் அறிவித்துள்ளார்.

இன்று முற்பகலில் அவருடைய அலுவலகத்தில் செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது. அப்போது அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.

கடந்த 13ஆம் தேதியன்று அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி எழுதிய கடிதத்தை வைத்து இந்த முடிவை எடுத்ததாக அவர் தெரிவித்தார்.

ஆனாலும் முன்னதாக விஜய் அரசுக்கு ஆதரவாக வாக்களித்துவிட்டு, பின்னர் அவர் தலைமையிலான த.வெ.க.வில் சேர்ந்த அ.தி.மு.க.வின் நான்கு சட்டப்பேரவை உறுப்பினர்கள் மீதான நடவடிக்கை தொடங்கியிருக்கிறது என்று மட்டும் அவர் கூறினார்.

இந்த நடவடிக்கை எடுப்பது தொடர் செயல்பாடு என்றும் அது நிறைவடைவதற்குள் அவ்வப்போது செய்தியாளர்களிடம் தெரிவிப்பேன் என்றும் பிரபாகர் சொன்னார்.

ஆளுநர் உரையுடன் சட்டப்பேரவைக் கூட்டம் நடைபெறவுள்ள நிலையில், அவர் தமிழ்த்தாய் வாழ்த்து மரபைப் பின்பற்றுவாரா எனக் கேட்டதற்கு, பிரபாகர் உரிய பதிலைக் கூறவில்லை.

logo
Andhimazhai
www.andhimazhai.com