21 தமிழக மீனவர்களை 4 படகுகளுடன் கைதுசெய்த இலங்கைப் படை!

tamilnadu fishermen
தமிழக மீனவர்கள்
Published on: 

தமிழகத்தைச் சேர்ந்த 21 மீனவர்கள் எல்லைமீறி மீன் பிடித்ததாக இலங்கைக் கடற்படை கைதுசெய்துள்ளது. 

இலங்கையின் வடக்கு மாகாணம், யாழ்ப்பாணம் மாவட்டம், நெடுந்தீவு கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடித்தனர் எனக் கூறி, புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாபட்டினம், கோட்டைப்பட்டினம் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த மீனவர்கள் 21 பேர் இன்று மாலையில் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

அவர்கள் பயன்படுத்திய 4 படகுகளையும் இலங்கைக் கடற்படை கைப்பற்றியது.

முதலில் தமிழக மீனவர்கள் காங்கேசன்துறை கடற்படை முகாமுக்குக் கொண்டுசெல்லப்பட்டு, மருத்துவப் பரிசோதனைக்கு உள்ளாக்கப்பட்டனர்.

தொடர்ந்து, 21 பேரும் மயிலிட்டி மீன்பிடித் துறைமுகத்தில் வைத்து கடல் தொழில் மீன்வளத் துறையினரிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வட இலங்கை ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

பின்னர் காவல்துறையினர் வசம் ஒப்படைக்கப்பட்டு, அவர்கள் நீதிமன்றத்தில் நிறுத்தப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடர: Facebook, Twitter, Youtube, Instagram

logo
Andhimazhai
www.andhimazhai.com