தமிழ் நாடு
வரும் 24ஆம் தேதி தமிழகத்தையொட்டி காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகும் என வானிலை மையம் அறிவித்திருந்தது.
இந்நிலையில் அதற்கு முன்னதாகவே 21ஆம் தேதியன்று தெற்கு மத்திய வங்கக் கடலில் இந்த காற்றழுத்தத் தாழி உருவாகியுள்ளது.
இது வலுவடைந்து காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாகி, 23ஆம் தேதி வடதமிழ்நாட்டுக் கடற்கரையை நோக்கி வரும்.
இதையொட்டி வரும் 22ஆம் தேதி முதல் 25ஆம் தேதிவரை வட தமிழ்நாட்டில் பர்வலாக மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பருவ மழையும் தொடங்கிவிட்டதால் கூடுதல் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.