தமிழகத்தில் கடந்த செப்டம்பர் மாதத்தில் மட்டும், 2.25 லட்சம் வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. கடந்த ஆண்டு இதே மாதத்தைவிட 46.14% கூடுதலாக வாகனங்கள் பதிவாகி உள்ளன.
கடந்த செப்டம்பரில், 1,72,875 இருசக்கர வாகனங்களும், 6,192 ஆட்டோக்கள், 34,483 தனிநபர் பயன்பாட்டுக்கான வாகனங்கள், 2,675 டிராக்டர்கள், 8,400 வணிகப் பயன்பாட்டுக்கான வாகனங்கள் உட்பட 2,25,176 வாகனங்கள் தமிழகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளன.
கடந்த 2025ஆம் ஆண்டு செப்டம்பரில் 1,54,85 வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதாவது, கடந்த ஆண்டைவிட இப்போது 46.14% கூடுதல்.
நாடளவில் கடந்த செப்டம்பரில், 17 லட்சத்து 90 ஆயிரத்து 188 இருசக்கர வாகனங்களும், 1 லட்சத்து 32 ஆயிரத்து 570 ஆட்டோக்கள், 4 லட்சத்து 27 ஆயிரத்து 213 தனிநபர் பயன்பாட்டுக்கான வாகனங்கள், 76 ஆயிரத்து 906 டிராக்டர்கள், 1 லட்சத்து 3 ஆயிரத்து 557 வணிக பயன்பாட்டுக்கான வாகனங்கள் உட்பட 25 லட்சத்து 36 ஆயிரத்து 920 வாகனங்கள் பதிவாகியிருக்கின்றன.
கடந்த ஆகஸ்ட் மாதம், நாடு முழுவதும் 24 லட்சத்து 23 ஆயிரத்து 201 வாகனங்கள் பதிவாகியிருந்த நிலையில், செப்டம்பர் மாதம் 4.69% அதிகமாக பதிவாகியுள்ளன.