தமிழக காவலர்கள் 23 பேருக்கு குடியரசு தலைவர் விருது!
தமிழ்நாட்டைச் சேர்ந்த 23 காவல் அதிகாரிகளுக்கு குடியரசு தலைவர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
தனிச்சிறப்புடன் பணியாற்றும் போலீஸாருக்கு குடியரசு தினம் மற்றும் சுதந்திர தினம் என ஆண்டுக்கு இருமுறை விருதுகள் வழங்கப்படும். அதன்படி, இந்த ஆண்டு குடியரசு தினத்தை முன்னிட்டு தமிழக காவல் துறையில் 23 பேருக்கு குடியரசுத் தலைவரின் மிகச்சிறப்பாக பணியாற்றிய காவலருக்கான விருது மற்றும் மற்றும் மெச்சத் தகுந்த பணிக்கான விருதுகளை மத்திய அரசு அறிவித்துள்ளது.
மிகச்சிறப்பாக பணியாற்றிய காவலருக்கான விருது காவல் இயக்குநர் வன்னிய பெருமாளுக்கும் ஏடிஜிபி அபின் தினேஷ் மோடக் ஆகியோருக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல், மெச்சத்தகுந்த பணிக்கான குடியரசுத் தலைவர் விருது பட்டியலில் 21 பேர் இடம் பெற்றுள்ளனர்.
ஐ.ஜி கண்ணன், ஐ.ஜி பாபு, காவல் ஆணையர் பிரவீன்குமார், எஸ்.பி பெரோஸ் கான் அப்துல்லா, எஸ்.பி சுரேஷ் குமார், எஸ்.பி கிங்ஸ்லின், எஸ்.பி சியாளா தேவி, எஸ்.பி பிரபாகர், எஸ்.பி பாலாஜி சரவணன், ஏடிஎஸ்பி ராதாகிருஷ்ணன், இன்ஸ்பெக்டர் சந்திரசேகர், டிஎஸ்பி டில்லிபாபு, டிஎஸ்பி மனோகரன், டிஎஸ்பி சங்கு, ஏடிஎஸ்பி ஸ்ரீபன், இன்ஸ்பெக்டர் சந்திரமோகன், இன்ஸ்பெக்டர் ஹரிபாபு, இன்ஸ்பெக்டர் தமிழ்ச்செல்வி, சப் இன்ஸ்பெக்டர் முரளி, சப் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன், சப் இன்ஸ்பெக்டர் முரளிதரன் ஆகியோருக்கு விருது அறிவிக்கப்பட்டுள்ளது.