தமிழ் நாடு
சட்டப்பேரவைத் தேர்தல் தொகுதிப் பங்கீடு தொடர்பாக தி.மு.க.வுடன் இரண்டுமூன்று நாள்களில் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் சோடங்கர் தெரிவித்துள்ளார்.
சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசுகையில் அவர் இதைக் கூறினார்.
இராகுல்காந்தியும் மல்லிகார்ஜுன கார்கேவும் கிராம கட்சிக் கமிட்டிக் கூட்டத்தில் கலந்துகொள்ள உள்ளனர் என்றும் அவர் கூறினார்.
கூட்டணிப் பேச்சு தொடர்பாக இன்று காலையில்கூட தி.மு.க. மக்களவை உறுப்பினர் கனிமொழியுடன் பேசியதாகவும் சோடங்கர் தெரிவித்தார்.
ஆட்சிப் பங்கு பற்றி காங்கிரஸ் தலைமையின் சார்பில் பேசப்படவில்லை என தி.மு.க. கூறியுள்ளதே எனக் கேட்டதற்கு, விவாதிக்கப்படும் ஒவ்வொரு விசயத்தைப் பற்றியும் ஆகவிரைவில் உங்களுக்குத் தெரிவிப்போம் என்றும் அவர் கூறினார்.