அண்ணா அறிவாலயம்
அண்ணா அறிவாலயம்

24 ஆம் தேதி முதல் தி.மு.க. தொகுதிவாரி ஆலோசனைக் கூட்டம்!

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் பணிகள் தொடர்பாக ஒவ்வொரு தொகுதிவாரியான நிர்வாகிகள் சந்திப்பு நடத்த திமுக முடிவு செய்துள்ளது. வரும் 24ஆம் தேதி முதல் சென்னை அண்ணா அறிவாலயத்தில் இந்தக் கூட்டம் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

முதலில் கிருஷ்ணகிரி, திருவள்ளூர் ஆகிய தொகுதிகளுக்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது. அதையடுத்து வரும் 27ஆம் தேதி பொள்ளாச்சி, கோவை, திருப்பூர், நீலகிரி ஆகிய தொகுதிகளுக்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெறும்.

இந்தக் கூட்டத்தில் அந்தந்தத் தொகுதிகளின் எல்லைக்கு உட்பட்ட கட்சியின் மாவட்ட, பகுதி, ஒன்றிய, நகர, பேரூர் அமைப்புகளின் செயலாளர்கள், மேயர், துணை மேயர்கள், தொகுதி பொறுப்பாளர்கள், மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினர்கள், ஒன்றியக் குழு தலைவர்கள், மாநகராட்சி மண்டல நிலைக் குழு தலைவர்கள், நகராட்சி தலைவர்கள், பேரூராட்சித் தலைவர்கள் என பல கட்ட நிர்வாகிகளும் கலந்து கொள்ள வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்து 28ம் தேதி நாமக்கல், ஈரோடு, சேலம், தர்மபுரி ஆகிய மாவட்டங்களுக்கும்

29ஆம் தேதி சிவகங்கை,விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி ஆகிய தொகுதிகளுக்கும் ஆலோசனைக் கூட்டம் நடைபெறும்.

30ஆம் தேதி தூத்துக்குடி, கன்னியாகுமரி, மதுரை, தேனி ஆகிய தொகுதிகளுக்கும் 31ஆம் தேதி ராமநாதபுரம், கடலூர் ஆகிய தொகுதிகளுக்கும்

பிப்ரவரி ஒன்றாம் தேதி சிதம்பரம், மயிலாடுதுறை, நாகப்பட்டினம் ,தஞ்சாவூர் ஆகிய தொகுதிகளுக்கும்,

இரண்டாம் தேதி வேலூர், அரக்கோணம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி ஆகிய தொகுதிகளுக்கும்,

மார்ச் மூன்றாம் தேதி வடசென்னை, தென்சென்னை, மத்திய சென்னை, திருப்பெரும்புதூர் ஆகிய தொகுதிகளுக்கும்,

ஏப்ரல் நான்காம் தேதி திருவண்ணாமலை, ஆரணி, பெரம்பலூர், திருச்சி ஆகிய தொகுதிகளுக்கும்,

ஏப்ரல் ஐந்தாம் தேதி கரூர், திண்டுக்கல், காஞ்சிபுரம், புதுச்சேரி ஆகிய தொகுதிகளுக்கும் நிர்வாகிகள் சந்திப்பு நடைபெறும் என்று தி.மு.க. தலைமைக் கழகம் அறிவித்துள்ளது.

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com