வருமான வரி துறை
வருமான வரி துறை

24 மணி நேரமும் செயல்படும் கட்டுப்பாட்டு அறை! - வருமான வரித்துறை ஏற்பாடு

மக்களவைத் தேர்தலை முன்னிட்டு வருமான வரித்துறை சார்பில் 24 மணி நேரம் செயல்படும் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் 7 கட்டங்களாக மக்களவைத் தேர்தல் நடைபெறும் என நேற்று தலைமை தேர்தல் ஆணையர் ராஜிவ் குமார் அறிவித்தார். அதன்படி, வரும் ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கும், தேர்தல் ஜூன் 1ஆம் தேதி முடிவடைகிறது. ஜூன் 4ஆம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது.

தமிழகத்தில் ஏப்ரல்19ஆம் தேதி ஒரே கட்டமாக மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான அறிவிப்பை தேர்தல் ஆணையம் வெளியிட்டு உள்ளது. தேர்தல் நன்னடத்தை விதிகளும் உடனடியாக அமலுக்கு வந்துள்ளன.

இந்நிலையில், மக்களவைத் தேர்தலை முன்னிட்டு வருமான வரித்துறை சார்பில் 24 மணி நேரம் செயல்படும் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பொருட்கள் விநியோகம் செய்வது தொடர்பான புகார்களை பொதுமக்கள் வருமான வரித்துறையிடம் தெரிவிக்கலாம்.

1800-425-6669 என்ற தொலைபேசி எண் மூலமாகவும், 94453 94453 என்ற வாட்ஸ் அப் எண் மூலமாகவும் புகார்களைத் தெரிவிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com