வானிலை மாற்றம்... இன்றும் 24 ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றம்!

தமிழ்நாடு காவல்துறை
தமிழ்நாடு காவல்துறை
Published on

தென்மேற்குப் பருவமழைக் காலம்தாமதமாகத் தாக்கத்தை ஏற்படுத்திவரும் நிலையில், மழை, வெயில் மாறிமாறி அடித்துவருகிறது. வானிலையின் இந்த மாற்றத்தைப் போல தமிழகத்தில் அண்மையில் அடிக்கடி ஐ.பி.எஸ். அதிகாரிகள் மாற்றம் நீடித்துவருகிறது. 

உள்துறைச் செயலாளரும் கூடுதல் தலைமைச்செயலாளருமான தீரஜ்குமார் இன்று வெளியிட்ட ஆணையின்படி, 24 மாவட்ட நிலை ஐ.பி.எஸ். அதிகாரிகள் பதவி, இட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

1. உயர்நீதிமன்ற வழக்குகள் கண்காணிப்புப் பிரிவு உதவி ஐ.ஜி. சக்திகணேசன், சென்னை மாநகரக் காவல் உளவுப் பிரிவு-1 துணை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.

2. மதுரையில் உள்ள தென்மண்டல அமலாக்கப் பிரிவு கண்காணிப்பாளர் சுஜித்குமார், சென்னை மாநகரக் காவல் பாதுகாப்புப் பிரிவு துணை ஆணையராக மாற்றப்பட்டுள்ளார்.

3. செல்வநாகரத்தினம் (போலீஸ் அகடமி பயிற்சி எஸ்.பி.)- புது பதவி- சென்னை, திருவல்லிக்கேணி துணை ஆணையர்

4. நிஷா, சென்னை மத்திய குற்றப்பிரிவு 2 - நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர்

5. ஹரிகிரன் பிரசாத், கண்காணிப்பாளர், கடலோரக் காவல் குழுமம்-சென்னை, மயிலை துணை ஆணையர்

6. ஆல்பர்ட் ஜான், திருப்பத்தூர் மாவட்ட கண்காணிப்பாளர்- தூத்துக்குடி

7. கார்த்திகேயன், திருவண்ணாமலை மாவட்ட கண்காணிப்பாளர்- கோவை

8. ஆதர்ஷ் பச்சேரா, நெல்லை கிழக்கு துணை ஆணையர்- பெரம்பலூர் எஸ்.பி.

9. புக்ய ஸ்னேகா பிரியா, பயங்கரவாத எதிர்ப்புப் படை, சென்னை- அண்ணா நகர் துணை ஆணையர்

10. ஸ்ரேயா குப்தா, பூக்கடை துணை ஆணையர்- திருப்பத்தூர் எஸ்.பி.

11. கவுதம் கோயல், தாம்பரம் சட்டம் ஒழுங்கு துணை ஆணையர்- சேலம் எஸ்.பி.

12. அருண் கபிலன், சேலம் எஸ்.பி.- நாகை

13. பெரோஸ் கான் அப்துல்லா, விருதுநகர் எஸ்.பி.- கரூர்

14. சுந்தர வடிவேல், நீலகிரி எஸ்.பி.- பூக்கடை துணை ஆணையர்

15. கண்ணன், நவீனமயம் உதவி ஐ.ஜி.- விருதுநகர் எஸ்.பி.

16. சுப்புலட்சுமி, துணை ஆணையர், மையக் குற்றப்பிரிவு, தாம்பரம்- கோயம்பேடு, சென்னை

17. ஸ்டாலின், துணை ஆணையர், மையக் குற்றப் பிரிவு 1, சென்னை- மயிலாடுதுறை எஸ்.பி.

18. பிரபாகர், கரூர் எஸ்.பி.- திருவண்ணாமலை

19. மகேசுவரன், துணை ஆணையர், பாதுகாப்பு -தருமபுரி எஸ்.பி.

20. வி.ஆர்.சீனிவாசன், சென்னை அண்ணா நகர் துணை ஆணையர்- தென்காசி எஸ்.பி.

21. மதிவாணன், சேலம் தெற்கு, துணை ஆணையர்- வேலூர் எஸ்.பி.

22. மெகலினா ஐடன், ஆவின் கண்காணிப்பு அதிகாரி- சென்னை, மாநகரத் தலைமையக துணை ஆணையர்

23. கீதாஞ்சலி, துணை ஆணையர் சைபர் கிரைம், சென்னை - மையக் குற்றப் பிரிவு 2, சென்னை

24. ரமேஷ்பாபு, துணை ஆணையர், கட்டுப்பாட்டு அறை, சென்னை - உயர்நீதிமன்றப் பாதுகாப்பு

logo
Andhimazhai
www.andhimazhai.com