28 ஆண்டுகளுக்குப் பின் கோவை குண்டுவெடிப்பு நபர் கைது!

28 ஆண்டுகளுக்குப் பின் கோவை குண்டுவெடிப்பு நபர் கைது!
Published on

கோவை தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் 2 இலட்சம் ரூபாய் பரிசு அறிவிக்கப்பட்டு தேடப்பட்ட நபர் ராஜா என்பவர் 28 ஆண்டுகளுக்குப் பிறகு சிக்கியுள்ளார். 

கோவையில் 1998ஆம் ஆண்டில் தொடர்ந்து நகரின் பல இடங்களில் குண்டுவெடிப்பு நிகழ்ந்து, அந்த நகரின் சூழலையே தலைகீழாகப் புரட்டிப் போட்டது. 58 அப்பாவிகள் உயிரிழந்தனர். இருநூறுக்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்தனர்.

தொழில் மையமாக இருந்த கோவை நகரம் அலங்கோலமாகிப்போனது. இதில் ஈடுபட்ட குற்றவாளிகள் பலரும் தலைமறைவாகிப் போனதாகக் கூறப்பட்டது.

ராஜா என்கிற டெய்லர் ராஜா, முஜிபுர் இரகுமான் இருவரும் தலைமறைவாகிவிட்டனர். இவர்களைப் பற்றி துப்பு கொடுத்தால் தலா 2 இலட்சம் ரூபாய் பரிசாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

கேரளம் முதலிய பல மாநிலங்களில் தேடப்பட்ட நிலையில், சத்தீஸ்கர் மாநிலத்தில் மிஜாபூர் எனும் இடத்தில் கைதுசெய்யப்பட்டுள்ளார். அம்மாநில காவல்துறை, மத்திய உள்துறை உளவு அமைப்பினரின் உதவியுடன் இவர் கைதுசெய்யப்பட்டுள்ளார் என்று காவல்துறை தனிப்படை தெரிவித்துள்ளது.

logo
Andhimazhai
www.andhimazhai.com