
சட்டமன்ற தேர்தல் தொகுதி பங்கீடு தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியுடன் இன்று மீண்டும் திமுக பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது.
திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீட்டு பேச்சுவார்த்தை ஏறக்குறைய இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. காங்கிரசுக்கு 28 இடங்களும், முஸ்லீம் லீக், மமக-க்கு தலா 2 இடங்கள் இதுக்கப்பட்டுள்ளன.
இதுதவிர தேமுதிக 10, கொமதேக, மக்கள் நீதி மய்யம் ஆகிய கட்சிகளுக்கு 2 தொகுதிகளும், கொங்கு இளைஞர் பேரவை,, முக்குலத்தோர் புலிப்படை, மனிதநேய ஜனநாயக கட்சி, ஆதித்தமிழர் பேரவை, டவாக, எஸ்.டி.பி.ஐ. ஆகிய கட்சிகளுக்கு தலா ஒரு தொகுதியும் ஒதுக்க உடன்பாடு ஏற்பட்டுவிட்டதாக கூறப்படுகிறது.
இன்னும், விசிக, சிபிஎம், மதிமுக ஆகிய மூன்று கட்சிகளுடன் மட்டுமே தொகுதி உடன்பாடு ஏற்படவில்லை.
இந்த நிலையில், சிபிஎம் பொதுச்செயலாளர் பெ. சண்முகம் திமுக பேச்சுவார்த்தை குழுவை இன்று மீண்டும் இரண்டாம் கட்டமாக சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
அதைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த பெ. சண்முகம் கூறியதாவது: “தொகுதிகளின் எண்ணிக்கையை திமுக பேச்சுவார்த்தை குழு சொல்லியிருக்கிறது. அதில் எங்களுக்கு ஏற்பு இல்லை. கூடுதல் தொகுதிகள் கேட்டு வலியுறுத்தியிருக்கிறோம். தலைமையிடம் பேசிவிட்டு பேசுகிறோம் என சொல்லியிருக்கிறார்கள். மீண்டும் நாளை பேச்சுவார்த்தை நடைபெறும்.
நிறைய புதிய கட்சிகள் கூட்டணிக்கு வந்துள்ளன என்ற நியாயமான காரணத்தை திமுக தொகுதிப் பங்கீடு குழு சொன்னது. அது ஏற்கத்தக்கது என்றாலும, கடந்த முறை கொடுத்த தொகுதிகளை விட கூடுதலான தொகுதிகளை கேட்டுள்ளோம்.” என்றார்.