அரசு மருத்துவமனை
அரசு மருத்துவமனை

அரசு மருத்துவமனைகளில் துப்புரவுப் பணியாளர்களுக்கு 3 ஷிப்ட்!

தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகள் முதல் ஆரம்ப சுகாதார நிலையங்கள்வரை துப்புரவுப் பணியாளர்களுக்கு மூன்று ஷிப்ட் வேலை முறை கொண்டுவரப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

சுகாதாரத் துறையின் செயலாளர் ககன் தீப் சிங் பேடி இதற்கான ஆணையைப் பிறப்பித்துள்ளார். 

காலை 6 மணி முதல் பிற்பகல் 2 மணிவரை ஒரு சுற்றும், 

மதியம் ஒரு மணி முதல் இரவு 9 மணிவரை இரண்டாவது சுற்றும், 

இரவு 8 மணி முதல் காலை 6 மணிவரை மூன்றாவது சுற்றுமாக வேலை நேரம் இருக்கும் என்று அதில் கூறப்பட்டுள்ளது. 

இருக்கின்ற இரண்டாம் தர செவிலியர் உதவியாளர், மருத்துவப் பணியாளர், துப்புரவுப் பணியாளர் ஆகியோரில், பாதி பேர் முதல் சுற்றிலும் 25 சதவீதம் பேர் அடுத்த சுற்றிலும் மீதமுள்ளவர்கள் இரவுப் பணியிலும் ஈடுபடுத்தப்பட வேண்டும் என்றும் அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

logo
Andhimazhai
www.andhimazhai.com