தமிழ் நாடு
தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு சொந்த ஊர்களுக்குச் சென்றவர்கள் சென்னைக்குத் திரும்புவதற்காக இன்று மூன்று சிறப்புத் தொடர்வண்டிகள் இயக்கப்படுகின்றன.
மாலை 3 மணிக்கு செங்கோட்டையிலிருந்தும், இரவு 7 மணிக்கு நெல்லையிலிருந்தும் சிறப்புத் தொடர்வண்டிகள் புறப்படுகின்றன.
கன்னியாகுமரியிலிருந்து இரவு 11.30 மணிக்கு சிறப்புத் தொடர்வண்டி சென்னையை நோக்கிப் புறப்படும் என்றும் தெற்கு இரயில்வே தெரிவித்துள்ளது.