தமிழ் நாடு
இருப்பது போதாது... தமிழகத்தில் மேலும் 3 சுங்கச் சாவடிகள்!
தமிழகத்தில் இப்போதே தேவைக்கு அதிகமாக சாலை சுங்கச் சாவடிகள் இருப்பதாக புகார்கள் கூறப்படும் நிலையில், கூடுதலாக மூன்று சாவடிகள் அமைக்கப்படும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
விழுப்புரம் மாவட்டம் நங்கிளிகொண்டான், திருவண்ணாமலை மாவட்டம் கரியமங்கலம், கிருஷ்ணகிரி மாவட்டம் நாகம்பட்டி ஆகிய இடங்களில்தான் சுங்கச்சாவடிகள் அமைக்கப்படவுள்ளன.
கரியமங்கலம் சாவடியில் ஒரு முறை போகவர ரூ.55 முதல் ரூ.370வரை கட்டணமாக முடிவுசெய்யப்பட்டுள்ளது. ஒரு நாளில் சென்றுவர ரூ.85 முதல் ரூ.555வரை என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மற்ற இரு இடங்களில் ஒரு முறை சென்றுவர ரூ.60- ரூ.400வரையாகவும் ஒரு நாளில் போய்வர ரூ.95 - ரூ.600வரையாகவும் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.