தமிழ்நாட்டுக்கு காவிரியில் வினாடிக்கு 3,000 கன அடி நீரை கர்நாடகம் திறந்துவிட வேண்டும் என காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. ஏற்கெனவே காவிரி ஒழுங்காற்றுக் குழு இந்த அளவுதண்ணீரைதமிழகத்துக்குத்திறந்துவிட பரிந்துரை செய்திருந்தது. அதையே ஆணையம் இப்போது உறுதிசெய்துள்ளது. பிற்பகல் 2 மணிக்குத் தொடங்கி ஒரு மணி நேரத்துக்கும் மேல் நடைபெற்ற கூட்டத்தில் இதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. முன்னதாக, தமிழ்நாட்டின் சார்பில் பங்கேற்ற பிரதிநிதிகள், அக்டோபரில்தமிழகத்துக்கு 22.5 டிஎம்சிதண்ணீர்தேவை என்பதால் வினாடிக்கு 16ஆயிரம் கன அடிநீரைத்திறக்க உத்தரவிட வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால் ஒழுங்காற்றுக் குழு பரிந்துரைத்த 3 ஆயிரம் கன அடி என்கிற அளவிலேயே ஆணையமும் நின்றுகொண்டது. வரும் அக்டோபர் 16ஆம் தேதி முதல் அடுத்த 15 நாள்களுக்கு தமிழகத்துக்கு காவிரி நீரைத்திறக்க உத்தரவிடப்பட்டுள்ளது.