தலைமைச்செயலகம்
தலைமைச்செயலகம்

4 அரசுத் துறைகளின் செயலர்கள் உட்பட ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மாற்றம்!

தமிழ்நாட்டு அரசின் நான்கு துறைகளின் செயலர்கள் உட்பட பல ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மாற்றப்பட்டுள்ளனர். 

உணவு-கூட்டுறவு-நுகர்வோர் விவகாரத் துறையின் செயலர் ஜெகநாதன், வணிகவரித் துறை ஆணையராக மாற்றப்பட்டுள்ளார். 

வீட்டுவசதி- நகர்ப்புற வளர்ச்சித் துறையின் செயலாளர் அபூர்வா, விவசாயத் துறைக்கு மாற்றப்பட்டுள்ளார். அந்தப் பதவியில் இருந்துவரும் சமயமூர்த்தி, அபூர்வாவின் இடத்துக்கு அமர்த்தப்பட்டுள்ளார்.

நிர்வாக சீர்திருத்தத் துறை ஆணையராக இருக்கும் கே.கோபால், உணவுத் துறையின் செயலராக நியமிக்கப்பட்டுள்ளார்.

சிறப்பு முயற்சிகள் துறையின் செயலர் ரமேஷ் சந்த் மீனா, திட்டம்- மேம்பாட்டுத் துறைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

கைத்திறத் தொழில்கள் வளர்ச்சிக் கழக மேலாண் இயக்குநர் வி.சோபனா எழுதுபொருள் அச்சுத் துறை ஆணையராக மாற்றப்பட்டு, அவரின் இடத்துக்கு சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழும முதன்மை அதிகாரி கவிதா ராமு நியமிக்கப்பட்டுள்ளார்.

தலைமைச்செயலாளர் சிவ்தாஸ் மீனா இதற்கான உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.

தலைமைச்செயலாளர் பதவியிலிருந்து இறையன்பு விலகியபின்னர், இந்திய ஆட்சிப் பணி அதிகாரிகள் மாற்றம் தொடர்ந்துகொண்டே இருப்பது, குறிப்பிடத்தக்கது.

logo
Andhimazhai
www.andhimazhai.com