தமிழ்நாடு சட்டப்பேரவை
தமிழ்நாடு சட்டப்பேரவை

4 நாள்களுக்கு முன்னரே கூடுகிறது சட்டப்பேரவை - புதிய அறிவிப்பு!

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் வரும் 20ஆம் தேதி அன்றே தொடங்கப்படுகிறது. 

மக்களவைத் தேர்தலை முன்னிட்டு சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர், மானியக் கோரிக்கை விவாதம் நடத்தப்படாமல் முடித்துவைக்கப்பட்டது. தேர்தல் முடிவுகள் வெளியானதை அடுத்து இந்த மாதம் 24 ஆம் தேதி சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் தொடங்கும் என சில நாள்களுக்கு முன்னர் அறிவிக்கப்பட்டது. 

இதனிடையே, விக்கிரவாண்டி சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தல் அடுத்த மாதம் 10ஆம் தேதி நடைபெறும் என நேற்று தேர்தல் ஆணையம் அறிவித்தது.

தேர்தலில் முதலமைச்சர் உட்பட பல கட்சிகளின் தலைவர்களும் பிரச்சாரம் செய்யவேண்டியுள்ள நிலையில், இன்று சட்டமன்றப் பேரவையின் செயலாளர் சீனிவாசன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், பேரவை விதி 26(1)-ன்படி, பேரவைக் கூட்டத் தொடரை அவைத்தலைவர் அப்பாவும் ஜூன் 24க்குப் பதிலாக ஜூன் 20ஆம் தேதியன்றே கூட்டியுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  

logo
Andhimazhai
www.andhimazhai.com