சிவப்பு எச்சரிக்கை
சிவப்பு எச்சரிக்கை

சென்னை உட்பட 4 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை!

சென்னை முதலிய 4 மாவட்டங்களுக்கு விடப்பட்ட ஆரஞ்ச் அலர்ட்டானது, ரெட் அலர்ட்டாக மாற்றப்பட்டுள்ளது. இந்த மாவட்டங்களில் அதீத கன மழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தென்கிழக்கு வங்கக்கடல் - அந்தமான் கடல் பகுதியில் உருவான ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியானது நேற்று காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக உருவெடுத்தது.

இன்று காலையில் அது புயலாக மாறியது. மிக்ஜம் எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தப் புயல் காரணமாக வட தமிழகத்தின் கடலோரப் பகுதிகளில் கடந்த சில நாள்களாகவே மிதமானது முதல் கனமழை வரை மழை பெய்துவருகிறது.

மேலும், புயல் குறித்த தகவல்களை இந்திய வானிலை ஆய்வு மையம் தொடர்ந்து வெளியிட்டு வருகிறது.

தற்போது வெளியிட்டுள்ள அறிவிப்பில், “சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களுக்கும் ரெட் அலர்ட் எனப்படும் சிவப்பு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இம்மாவட்டங்களில் அதீத கன மழை பெய்யும்.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

logo
Andhimazhai
www.andhimazhai.com