தமிழ் நாடு
தேர்தல் ஆணையத்தால் அண்மையில் பல காவல்துறை அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டனர். அதில் பலர் கட்டாயக் காத்திருப்பிலும் வைக்கப்பட்டனர்.
அப்படி காத்திருக்க வைக்கப்பட்ட நான்கு அதிகாரிகளுக்கு மீண்டும் பணி வழங்கப்பட்டுள்ளது.
விருதுநகர் மாவட்ட முன்னாள் எஸ்.பி. டி.கண்ணன், காவலர் நலப் பிரிவு சென்னை துணை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.
நாகை முன்னாள் காவல் கண்காணிப்பாளர் கே.எஸ். பாலகிருஷ்ணன் சென்னை மாநகர காவல்துறை துணை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.
கரூர் மாவட்ட முன்னாள் காவல் கண்காணிப்பாளர் ஜோஸ் தங்கையா, சென்னை மாநகரக் காவல்துறையின் பாதுகாப்புப் பிரிவு துணை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.
ஈரோடு மாவட்ட முன்னாள் எஸ்.பி. பயங்கரவாத எதிர்ப்புப் படையின் கண்காணிப்பாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.