லாரி, ஆம்னி, அரசுப் பேருந்து மோதி விபத்து
லாரி, ஆம்னி, அரசுப் பேருந்து மோதி விபத்து

4 பேர் பலி- லாரியுடன் ஆம்னி, அரசுப் பேருந்துகள் அடுத்தடுத்து மோதி விபத்து!

திருச்சியிலிருந்து சென்னைக்குச் சென்ற லாரியும் இரண்டு பேருந்துகளும் அடுத்தடுத்து மோதியதில் விபத்து ஏற்பட்டு, நான்கு பேர் உயிரிழந்தனர்.

திருச்சி- சென்னை நெடுஞ்சாலையில் செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் வட்டம், பழமத்தூர் புக்கத்துறை கூட்டுச்சாலையில் அதிகாலையில் இந்த விபத்து நேரிட்டது. 

சென்னையிலிருந்து பூந்தமல்லிக்கு கிரானைட் ஏற்றிச்சென்ற லாரி பழுதாகி நின்றது. அப்போது, திருச்சியிலிருந்து சென்னைக்குச் சென்றுகொண்டிருந்த ஆம்னி பேருந்தும் முசிறியிலிருந்து சென்னைக்குச் சென்ற அரசுப் பேருந்தும் அடுத்தடுத்து மோதிக்கொண்டன.   

இந்தக் கோர விபத்தில் ஆம்னி பேருந்தில் பயணித்த 4 பேர் அந்த இடத்திலேயே உயிரிழந்தனர். 

அரசுப் பேருந்தில் பயணம்செய்தவர்கள் உட்பட 20 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

இந்த நிலையில், விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். 

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com