கருணாஸ்
கருணாஸ்

நடிகர் கருணாஸிடம் 40 துப்பாக்கி குண்டுகள் பறிமுதல்!

சென்னை விமான நிலையத்தில் நடிகர் கருணாஸிடமிருந்து 40 துப்பாக்கி குண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

முக்குலத்தோர் புலிப்படை கட்சியின் தலைவரும் நடிகருமான கருணாஸ் சென்னையிலிருந்து திருச்சி செல்வதற்காக இன்று காலை சென்னை உள்நாட்டு விமான நிலையத்திற்கு வந்துள்ளார்.

அப்போது அவர் கொண்டு வந்திருந்த கைப்பையை பாதுகாப்பு அதிகாரிகள் ஸ்கேன் செய்து பார்த்துள்ளனர். அப்போது எச்சரிக்கை அலாரம் ஒலித்துள்ளது. இதனைத் தொடர்ந்து கைப்பையிலிருந்த 40 குண்டுகளைப் பாதுகாப்பு அதிகாரிகள் கைப்பற்றினர்.

இது குறித்து கருணாஸிடம் நடத்திய விசாரணையில், தன்னிடம் துப்பாக்கி உரிமம் இருப்பதற்கான ஆவணத்தைக் காட்டியவர், துப்பாக்கி குண்டுகளைத் தெரியாமல் அவசரத்தில் எடுத்து வந்துவிட்டதாகவும் கூறியுள்ளார்.

இருப்பினும், அவரின் பயணத்தை விமான நிலைய அதிகாரிகள் ரத்து செய்துள்ளனர்.

இதனால், சென்னையிலிருந்து திருச்சி செல்லும் இண்டிகோ விமானம் அரை மணி நேரம் தாமதமாகப் புறப்பட்டுச் சென்றது.

logo
Andhimazhai
www.andhimazhai.com