தீபாவளிக்கு சொந்த ஊர் செல்ல காத்திருக்கும் மக்கள்
தீபாவளிக்கு சொந்த ஊர் செல்ல காத்திருக்கும் மக்கள்

சென்னையில் இருந்து 4.83 லட்சம் பேர் பயணம்: அரசு பஸ்களில் மட்டும் 42.6%

தீபாவளியையொட்டி சென்னையில் இருந்து கடந்த 2 நாட்களில் அரசு மற்றும் தனியார் பேருந்துகளில் மட்டும் இதுவரை 4,83,680 பயணிகள் தங்களது சொந்த ஊர்களுக்கு பயணம் செய்துள்ளனர்.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னையிலிருந்து சொந்த ஊா்களுக்கு செல்லும் பயணிகளின் வசதிக்காக கோயம்பேடு பேருந்து நிலையம், மாதவரம், தாம்பரம் மெப்ஸ், தாம்பரம் ரயில் நிலைய பேருந்து நிறுத்தம், பூந்தமல்லி பைபாஸ் பேருந்து நிறுத்தம், கே.கே.நகா் மாநகர போக்குவரத்துக் கழக பேருந்து நிலையம் மூலமாகவும் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

இந்த நிலையில். தீபாவளியையொட்டி சென்னையில் இருந்து கடந்த 2 நாட்களில் அரசு மற்றும் தனியார் பேருந்துகளில் மட்டும் இதுவரை 4,83,680 பயணிகள் தங்களது சொந்த ஊர்களுக்கு பயணம் செய்துள்ளனர். இதில் அரசுப் பேருந்தில் 2 லட்சத்து 6 ஆயிரம் பேரும், தனியார் பேருந்தில் 2 லட்சத்து 77 ஆயிரத்து 680 பேரும் பயணம் செய்துள்ளனர். அரசுப் பேருந்து விட தனியார் பேருந்தில் 71, 680 பேர் பயணம் செய்துள்ளனர்.

இன்று சனிக்கிழமை என்பதால் மேலும் பலர் தங்களது சொந்த ஊர்களுக்கு பயணம் மேற்கொள்வர் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல், தனியார் பேருந்துகளின் கட்டணம் இன்று குறைந்திருப்பதாக கூறப்படுகிறது.

logo
Andhimazhai
www.andhimazhai.com