சென்னை மெட்ரோ ரயில்
சென்னை மெட்ரோ ரயில்

5 ரூபாயில் மெட்ரோ ரயில் பயணம்... 17ஆம் தேதி சலுகை!

சென்னை மெட்ரோ இரயில் நிறுவன நாளை முன்னிட்டு மெட்ரோ இரயிலில் ரூ.5 என்ற கட்டணத்தில் மீண்டும் வரும் 17-ம் தேதி அன்றும் பயணிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

​சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் நிறுவன நாளை முன்னிட்டு 03.12.2023 அன்று க்யூஆர் பயணச்சீட்டுகளை (Static QR; Mobile QR; Paytm; Whatsapp and PhonePe) செயலிகள் பயன்படுத்தி பயணித்த பயணிகளுக்கு சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் வெறும் ரூ.5 என்ற பிரத்யேகக் கட்டணத்தை வழங்கியது.

​இந்நிலையில், மிச்சாங் புயல் மற்றும் கனமழை காரணமாக (03.12.2023) அன்று மெட்ரோ பயணிகள் அதிக அளவில் பயணிக்க இயலாத காரணத்தினால் மீண்டும் வருகின்ற 17.12.2023 (ஞாயிற்றுக்கிழமை) அன்றும் மெட்ரோ பயணிகள் இச்சலுகையைப் பயன்படுத்தி வெறும் ரூ.5 என்ற பிரத்யேகக் கட்டணத்தில் பயணிக்கலாம்.

​இந்த பிரத்யேகக் கட்டணம் டிசம்பர் 17, 2023 (ஞாயிற்றுக்கிழமை) அன்று மட்டுமே செல்லுபடியாகும்.

மேலும் இது இ-க்யூஆர் பயணச்சீட்டுகளுக்கு (Static QR; Mobile QR; Paytm; Whatsapp and PhonePe) செயலிகளுக்கு மட்டுமே பொருந்தும். சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் பயண அட்டை, சிங்காரச் சென்னை அட்டை, மொபைல் ஆப் மூலம் ஸ்டோர் வேல்யூ பாஸ் மற்றும் காகித க்யூஆர் ஆகிய பயணச்சீட்டு முறைக்கு இச்சலுகைக்கு பொருந்தாது.

​பயணிகளின் ஒட்டு மொத்த பயண அனுபவத்தை மேம்படுத்தவும், டிஜிட்டல் பயணச்சீட்டுகளை ஊக்குவிக்கவும் இந்த பிரத்யேகக் கட்டணச் சலுகை வழங்கப்படுகிறது.

​சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com