தமிழ்நாட்டுக்கு 5 தலைநகரங்கள்- நா.த.க. தேர்தல் அறிக்கை

தேர்தல் அறிக்கையை வெளியிட்ட சீமான்
தேர்தல் அறிக்கையை வெளியிட்ட சீமான்
Published on

ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ கடந்த செவ்வாயன்று அக்கட்சியின் தேர்தல் அறிக்கையை வெளியிட்டார். அதைத் தொடர்ந்து நாம் தமிழர் கட்சியின் ஆட்சிச் செயற்பாட்டு வரைவு எனும் பெயரிலான தேர்தல் அறிக்கையை அக்கட்சியின் தலைவர் சீமான் சென்னையில் இன்று வெளியிட்டார்.

அதில், தமிழ்நாட்டின் நிர்வாகத்தலை நகரமாக திருச்சி மாற்றப்படும் என்று கூறப்பட்டுள்ளது. 

சென்னை தொழில்நுட்பத் தலைநகராகவும்,

கோவை வணிகத் தொழில் தலைநகராகவும்,

மதுரை மொழி, கலை பண்பாட்டுத் தலைநகராகவும்

கன்னியாகுமரி மெய்யியல் தலைநகரமாகவும் இருக்கும் என்றும் அக்கட்சியின் ஆட்சிச் செயற்பாட்டு வரைவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

logo
Andhimazhai
www.andhimazhai.com