த.வெ.க.வில் புதிய மாவட்ட அமைப்புகள்- விஜய் அறிவிப்பு!

விஜய் - புதிய கட்சி
விஜய் - புதிய கட்சி
Published on

மற்ற கட்சிகளிலிருந்து த.வெ.க.வில் ஏராளமானவர்கள் சேர்ந்துவரும் நிலையில், அக்கட்சியில் புதியதாகஐந்து மாவட்ட அமைப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன.

இதுகுறித்து த.வெ.க. தலைவர் விஜய் இன்று வெளியிட்ட அறிவிப்பு விவரம்:

”தமிழக வெற்றிக் கழகத்தில் கழகப் பணிகளை இன்னும் சிறப்பாக மேற்கொள்ளும் வகையில், கழக அமைப்பானது சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கிய மாவட்டங்களாக ஏற்கனவே பிரிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் நிர்வாக வசதிகளுக்காக கழக மாவட்டங்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கப்பட்டுள்ளன. அதன்படி ஏற்கனவே அறிவிக்கப்பட்ட மாவட்டங்களோடு, மேலும் மாவட்டங்கள் பிரிக்கப்பட்டு,

தற்போது 1. காஞ்சிபுரம் தெற்கு மாவட்டம் 2. திருநெல்வேலி தென்கிழக்கு மாவட்டம் 3. திருநெல்வேலி மத்திய மாவட்டம் 4. திருநெல்வேலி வடக்கு மாவட்டம் 5. திருவண்ணாமலை வடமேற்கு மாவட்டம் ஆகிய 5 மாவட்டங்களுக்கு நிர்வாகிகள் நியமிக்கப்படுகிறார்கள்.” என்று தெரிவித்துள்ளார்.

logo
Andhimazhai
www.andhimazhai.com