50ஆம் பிறந்த நாளில் சூர்யா செய்த வேலை!

50ஆம் பிறந்த நாளில் சூர்யா செய்த வேலை!
Published on

திரைப்பட நடிகர் சூர்யா தன் ஐம்பதாவது பிறந்த நாளை இன்று கொண்டாடுகிறார். இதையொட்டி சென்னை, தியாகராயர் நகரில் அவர் வீட்டின் முன்பாக ரசிகர்கள் திரண்டனர். வீட்டின் மாடியிலிருந்து அவர்களைப் பார்த்து சூர்யா கையசைத்தார்.    

முன்னதாக, இன்று காலையில் பிறந்த நாளையொட்டி, சூர்யா, ஜோதிகா இருவரும் சென்னை பாரிமுனை பகுதியில் உள்ள காளிகாம்பாள் கோயிலுக்குச் சென்றனர்.

அங்கு சூர்யாவுக்காக சிறப்பு பூஜை நடத்தினர்.

பொதுவாக, ஒவ்வோர் ஆண்டும் சூர்யா தன்னுடைய பிறந்தநாளன்றும் இந்தக் கோயிலுக்குச் செல்வது வழக்கம்.

மும்பையில் கணிசமாக நாள்களைக் கழித்தாலும், வழக்கம்போலவே இந்த ஆண்டும் தவறாமல் காளிகாம்பாள் கோயிலில் அவர் வழிபட்டார்.   

logo
Andhimazhai
www.andhimazhai.com