ஒரே நாளில் 56 போலீஸ் அதிகாரிகள் மாற்றம்!
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 56 போலீஸ் உயர் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கான உத்தரவை உள்துறைச் செயலாளரும் கூடுதல் தலைமைச்செயலாளருமான தீரஜ்குமார் வெளியிட்டுள்ளார்.
கடந்த சில மாதங்களாக தமிழக காவல் துறையில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன.
அந்தவகையில், கடந்த வாரம் 17 ஐ.பி.எஸ். அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர். நேற்று 56 ஐ.பி.எஸ்., அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்.
இந்த நிலையில், இன்று காலை 24 காவல் அதிகாரிகள் பணி உயர்வு மற்றும் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர். இந்த அறிவிப்பு வெளியான அடுத்த சில மணி நேரத்திலேயே, 34 அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
அதன் விவரம்:
• கோவை நீதிமன்ற ஊழல் தடுப்புப் பிரிவு கூடுதல் கண்காணிப்பாளராக இருந்த பி. மணிகண்டன், லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்பு சென்னை பிரிவு கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
• தஞ்சவூர் காவல் தலைமை அலுவலக கூடுதல் கண்காணிப்பாளர் வி. ஜெயசந்திரன், கண்காணிப்பாளராக பதவி உயர்வு வழங்கப்பட்டு சென்னை பெருநகர மாநகராட்சியின் மத்திய குற்றவியல் பிரிவு 1இன் துணை ஆணையராக பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
• கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கூடுதல் கண்காணிப்பாளர் எஸ்.குத்தாலிங்கம் கண்காணிப்பாளராக பதவி உயர்வு செய்யப்பட்டு சென்னை தி.நகர் காவல் நிலைய துணை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.
• மதுரை உயர்நீதிமன்ற விஜிலன்ஸ் பிரிவு கூடுதல் கண்காணிப்பாளராக இருந்த எஸ். விஜயகுமார் திருநெல்வேலி நகர காவல் துறையின் துணை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.
• சென்னை சி.ஐ.டி, சிறப்பு பிரிவு கூடுதல் கண்காணிப்பாளராக இருந்த ஜி.கார்த்திக்கேயன், சென்னை காவல் துறையின் தீவிரவாத தடுப்புப் பிரிவு கண்காணிப்பாளராக நிய்மிக்கப்பட்டுள்ளார்.
• கிருஷ்ணகிரி மாவட்ட காவல் துறையின் சைபர் குற்றவியல் பிரிவு கூடுதல் கண்காணிப்பாளராக இருந்த சி.சங்கு, அதே மாவட்டத்தில் போச்சாம்பள்ளி TSP VII Bn பிரிவு கண்காளிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
• திருநெல்வேலி காவல் துறை சைபர் குற்றவியல் பிரிவு கூடுதல் கண்காணிப்பாளராக இருந்த ஏ.சி. கார்த்திக்கேயன், பள்ளிக்கரணை, தாம்பரம் சட்டம் மற்றும் ஒழுங்கு பிரிவி துணை ஆணையராக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.
• தேனி காவல் துறை சைபர் குற்றவியல் பிரிவு கூடுதல் கண்காணிப்பாளராக இருந்த வி.கார்த்திக், பழனி TSP XIV Bn கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
• சென்னை ஊழல் தடுப்பு மற்றும் விஜிலன்ஸ் பிரிவு கூடுதல் கண்காணிப்பாளராக இருந்த ஏ.ஜி.இனிகோ திய்வன் மதுரை Civil Supplies CID துறை கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
• கடலூர் காவல் துறை கூடுதல் கண்காணிப்பாளராக இருந்த எஸ். அசோக் குமார், பதவி உயர்வு பெற்று கோயம்புத்தூர் போக்குவரத்து காவல் துறை துணை ஆணையராக பொறுப்பேற்றுள்ளார்.
• ராமநாதபுரம் காவல் துறை கூடுதல் கண்காணிப்பாளராக இருந்த எஸ். ஏ.அருண், மணிமுத்தாறு காவல் துறை TSP XII Bn கண்காணிப்பாளராக பதவி உயர்வு பெற்றுள்ளார்.
• விழுப்புரம் மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு கூடுதல் கண்காணிப்பாளராக இருந்த என்.தேவநாதன், சென்னை மேற்கு ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவின் கண்காணிப்பாளராக பதவி உயர்வு பெற்றுள்ளார்.
• கோயம்புத்தூர் மாவட்ட காவல் துறை கூடுதல் கண்காணிப்பாளராக இருந்த கே.முத்துக்குமார், சென்னை புளியந்தோப்பு காவல் நிலையத்தின் கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
• திருவாரூர் மாவட்ட காவல் துறை கூடுதல் கண்காளிப்பாரக இருந்த டி.ஈஸ்வரன் சென்னை குற்றவியல் பிரிவு கண்காணிப்பாளராக பதவி உயர்வு பெற்றுள்ளார்.
• கள்ளக்குறிச்சி செபர் குற்றவியல் பிரிவு கூடுதல் கண்காணிப்பாளராக இருந்த வி.கோமதி, சென்னை காவல் துறை நிர்வாகத்தின் Assistant Inspector General of Police -ஆக நியமிக்கப்பட்டுள்ளார்.
• நாகப்பட்டின மாவட்ட காவல் துறை கடலோர பாதுகாப்பு குழு கூடுதல் கண்காணிப்பாளராக இருந்த எம்.மீனாட்சி, சென்னை செபைர் குற்றவியல் தடுப்புப் பிரிவின் சைபர் அரங்கம் கண்காணிப்பாளராக நிமியமிக்கப்பட்டுள்ளார்.
• பெரம்பலூர் மாவட்ட குழந்தை மற்றும் மகளிருக்கு எதிரான குற்றங்கல் பிரிவு கூடுதல் கண்காணிப்பாளராக இருந்த ஏ. வேல்முருகன், சேலம் தென் பகுதியின் காவல் துறை துணை ஆணையாராக பொறுப்பேற்றுள்ளார்.
• கடலூர் மாவட்ட உயர்நீதிமன்ற கண்காணிப்பு பிரிவு கூடுதல் கண்காணிப்பாளராக இருந்த எ. முத்தமிழ், சென்னை தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு லிமிடெட் (Tamil Nadu Co-operation Milk Producers Federation Ltd) அமைப்பின் தலைமை கண்காணிப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
• தாம்பரம் காவல் துறையின் சைபர் குற்றவியல் பிரிவு கூடுதல் கண்காணிப்பாளராக இருந்த ஜெ.ஜெ. ஜெரீனா பேகம், சென்னை சைபர் குற்றவியல் பிரிவு துணை ஆணையராக பதவி உயர்வு பெற்றுள்ளார்.
• சென்னை சிறப்பு பிரிவி சி.ஐ.டி. காவல் துறை கூடுதல் கண்காணிப்பாளராக இருந்த ஆர். ரமேஷ் கிருஷ்ணன், மதுரை தீவிரவாத தடுப்புப் பிரிவு கண்காணிப்பாளராக பதவி உயர்வு பெற்று மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
• ஆவடி காவல் துறை மகளிர் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் பிரிவு கூடுதல் கண்காணிப்பாளராக இருந்த பி. கீதா, சேலம் மாவட்ட காவல் துறை தலைமை அலுவலகத்தின் துணை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.
• நாகை மாவட்ட காவல் துறை சைபர் குற்றவியல் பிரிவு கூடுதல் கண்காணிப்பாளராக இருந்த கே, மகேஷ்வரி, தூத்துக்குடி மாவட்டத்திற்கு (பேரூரணி காவலர் பயிற்சி பள்ளி) கண்காணிப்பாளராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
• மதுரை காவல் பயிற்சி பள்ளியில் Principal,கூடுதல் கண்காணிப்பாளராக இருந்த ஆர்.ராகேஸ்வரி, மதுரை காவல் துறை தலைமை அலுவகத்தின் துணை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.
• நாமக்கல் மாவட்ட காவல் துறை தலைமையகத்தின் கூடுதல் காவல் கண்காணிப்பாளராக இருந்த ஏ. கனகேஸ்வரி, சென்னை காவல் துறையின் Economic Offences பிரிவின் கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இரண்டாம் கட்டமாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ள 32 அதிகாரிகளின் விவரம்:
• கோவை பயங்கரவாத தடுப்புப் பிரிவு எஸ்.பி.யாக இருந்த வி.சசிமோகன், ஈரோடு சிறப்பு அதிரடிப்படை எஸ்.பி.யாக நியமிக்கப்பட்டுள்ளார்
• திருவல்லிக்கேணி காவல் துணை ஆணையர் தேஷ்முக் ஷேகர் சஞ்சய், சென்னை ஐகோர்ட்டு வழக்குகளை கண்காணிக்கும் பிரிவு காவல் கண்காணிப்பாளர்/காவல்துறை உதவி ஆய்வாளர் ஜெனரலாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
• மாநில மனித உரிமைகள் ஆணைய எஸ்.பி. மகேஷ்வரன், ஆவடி காவல் ஆணையரகத்தின் தலைமையகம் மற்றும் நிர்வாக துணை ஆணையராக நியமனம்
• ஆவடி காவல் ஆணையரகத்தின் போக்குவரத்து துணை ஆணையராக இருந்த ஜெயலட்சுமி, மாநில மனித உரிமைகள் ஆணைய எஸ்.பி.யாக நியமனம்
• சென்னை புளியந்தோப்பு துணை ஆணையராக இருந்த ஈஸ்வரன், சென்னை ரெயில்வே எஸ்.பி.யாக நியமனம்
• ஈரோடு சிறப்பு அதிரடிப்படை எஸ்.பி.யாக இருந்த ராஜன், திருச்சி ரெயில்வே எஸ்.பி.யாக நியமனம்,
• மாநில காவல்துறை முதன்மை கட்டுப்பாட்டு அறை எஸ்.பி.யாக இருந்த வனிதா, மதுரை நகர போக்குவரத்து துணை ஆணையராக நியமனம்
அதன் முழுவிவரம்: