புயலால் பாதிக்கப்பட்டுள்ள சென்னை நகரில் ஆறு சுரங்கப்பாதைகளில் மட்டுமே வெள்ள நீர் தேங்கியுள்ளன என்றும் அவை மட்டுமே மூடப்பட்டுள்ளன என்றும் மாநகராட்சியின் முகநூல் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வடசென்னை மாணிக்கம் நகர் சுரங்கப்பாதை, வியாசர்பாடி சுரங்கப்பாதை, கணேசபுரம் சுரங்கப்பாதை,
மைய சென்னையில் எழும்பூர் கெங்குரெட்டி சுரங்கப்பாதை,
மேற்கு சென்னையில் வில்லிவாக்கம் சுரங்கப்பாதை,
தென்சென்னையில் கோடம்பாக்கம்- தியாகராயர் நகர் ரங்கராஜபுரம் சுரங்கப்பாதை ஆகியவற்றில் இன்னும் வெள்ள நீர் தேங்கியிருப்பதாகவும், மற்ற பதினாறு சுரங்கப்பாதைகளில் வெள்ளம் வடிந்துவிட்டதாகவும் மாநகராட்சியின் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதே சமயம், அந்த இடுகையில், கொரட்டூர் சுரங்கப்பாதையில் இன்னும் தண்ணீர் தேங்கியிருப்பதாகக் குறிப்பிட்டு, கவனம் ஈர்க்கப்பட்டுள்ளது.
மேலும், ஸ்டேன்லி நகர் சுரங்கப்பாதையிலும் நீர் தேங்கியுள்ளதாக இன்னொருவர் குறிப்பிட்டுள்ளார்.