மழை
மழை

7, 8 தேதிகளில் பரவலான மழைக்கு வாய்ப்பு!

தமிழ்நாட்டில் வரும் 7, 8 ஆகிய தேதிகளில் பரவலாக கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. 

கோடை வெயிலின் தாக்கம் மாநிலம் முழுவதும் கடுமையாக இருக்கும் நிலையில், நேற்று ஆங்காங்கே சிறிதளவு மழை பெய்தது. 

தென்னிந்தியப் பகுதியில் வளிமண்டலத்தில் கீழடுக்கு சுழற்சி நிலவுவதன் காரணமாக, வரும் 7ஆம் தேதி தேனி, திண்டுக்கல், திருப்பூர், கோவை, நீலகிரி, ஈரோடு, , சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி ஆகிய 9 மாவட்டங்களில் கன மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை மையம்தெரிவித்துள்ளது. 

அடுத்த நாளான மே 8ஆம் தேதியன்று கோவை, நீலகிரி, திருப்பூர், திண்டுக்கல், தேனி, விருதுநகர், தென்காசி, நெல்லை ஆகிய மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு உண்டு என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இன்றுமுதல் வரும் 8ஆம் தேதிவரை பொதுவாக மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை மையம் கூறியுள்ளது.  

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com