7 நாள்களுக்கு மிதமான மழை பெய்யும்!

 மழை
மழை
Published on

தமிழ்நாட்டில் இன்று முதல் வரும் 7ஆம் நாள்வரை மிதமான மழை பெய்யும் என வானிலை மையம் கூறியுள்ளது. 

மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்கள், காவிரிப் படுகை மாவட்டங்களின் கடலோரப் பகுதிகள், இராமநாதபுரம் மாவட்டத்தில் ஓரிரு இடங்களிலும் காரைக்கால் பகுதிகளிலும் வரும் 21ஆம் தேதிவரை இலேசான மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்கள், காவிரிப்படுகை மாவட்டங்கள், தெற்கு கடலோர மாவட்டங்களில் 22, 23 ஆகிய தேதிகளில் ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்பு உண்டு.

இதே சமயம் பொதுவாக தமிழகம், புதுவையில் வறண்ட வானிலை நிலவக்கூடும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.

தலைநகரம் சென்னையைப் பொறுத்தவரை, இன்றும் நாளையும் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்; வெப்பநிலை அதிகபட்சம் 36-37 டிகிரி செல்சியசை ஒட்டியும் குறைந்தபட்சம் 28 டிகிரி செல்சியசை ஒட்டியும்  இருக்கக்கூடும். 

logo
Andhimazhai
www.andhimazhai.com