பதிவுசெய்யாத 7.48 லட்சம் விவசாயிகள்... திண்டாடும் அதிகாரிகள்!

விவசாயிகள்
விவசாயிகள்
Published on

ஏழு இலட்சத்து 48 ஆயிரத்து188 லட்சம் விவசாயிகள் பதிவு செய்யவில்லை என்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் பி.எஸ்.மாசிலாமணி அதிருப்தி தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

“ விவசாயிகள் வேளாண் அடையாள அட்டை பெற்றவர்களுக்கு மட்டுமே அரசுகளின் மானியம் மற்றும் உதவித் திட்டங்கள் வழங்கிடப்படும் என ஒன்றிய அரசு புதிய திட்டத்தை அறிவித்து.

கடந்த இரு ஆண்டுகளாக நில உடமை ஆவணம் உள்ளவர்களை மட்டுமே பதிவுசெய்து, இவர்களுக்கு மட்டுமே அடையாள அட்டைகள் வழங்க படும் என அறிவித்துள்ளது.

நில ஆவணம் தன் பெயரில் இல்லாதவர்கள் பதிவு செய்ய முடியாது, அடையாள அட்டைகளும் வழங்கப்படாது என ஒன்றிய அரசு நடைமுறையாக்கி வருகிறது.. இதனால் இலட்சக்கணக்கான விவசாயிகள் பதிவு செய்ய முடியாமல் எதிர்வரும் காலங்களில் அரசின் திட்டங்களை பெற முடியாத சூழல் ஏற்படும் என்பதை அப்போதே தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் எதிர்ப்பை பதிவு செய்திருந்தோம்.

இந்த நிலையில் நில உடமை ஆவணம் உள்ளவர்களை மட்டுமே கடந்த இரு ஆண்டுகளாக பதிவு செய்து வருகிறது. பல தடவை அரசு அறிவித்தும், இந்தத் திட்டத்தில் இணைந்திட வேண்டிய காலத்தை நீட்டித்தும்.... 42,52,432 பேர்களுக்கு நில உடமை ஆவணங்கள் இருந்தும், 2026 மே 16 வரை 35,04,244 பேர்கள் மட்டுமே பதிவு செய்துள்ளனர். எஞ்சிய 7,48,188 லட்சம் விவசாயிகள் இத்திட்டத்தில் பதிவு செய்திடவில்லை.

இந்த நிலையிலும் தமிழ்நாடு அரசு மீண்டும் ஒரு சிறப்பு முகாம் நடத்திட அறிவித்துள்ளது.

இதற்கான காரணமே...... நிலங்கள் மூதாதையர் பெயர்களில் ஆவணங்கள் இருப்பதை, வாரிசுகள் தன் பெயரில் மாறுதல் செய்யாதது. .....சாகுபடி நிலங்களை சொந்தமாக கிரயம் பெற்றும், தன் பெயரில் பத்திரப்பதிவு செய்து கொள்ளாதது. விற்பனை செய்து விட்டதால் நில உடமையாளர்களும் இதில் அக்கரை கொள்ளாதது.

.....நில ஆவணம் உள்ள உரிமையாளர்கள் சிலர் இறந்து விட்டனர். இவர்களின் நிலத்தை வைத்திருப்போர்களிடம் பத்திர பதிவு இல்லை. ...,.. பத்திர பதிவு செய்த விவசாயிகளின் அடங்கலை வருவாய்த்துறை மாறுதல் செய்யாமல் இருப்பது. ...... வெளியூர்களில் இருக்கும் நில உடமையாளர்களை தொடர்பு கொள்ள முடியாதது. ..... கிராம சமுதாய நலன்களை பல பகுதிகளில் சாகுபடி செய்து வரும் விவசாயிகள் இன்சூரன்ஸ் நிவாரணம் பெறுகிறார்கள். இவர்களுக்கும் ஆவணங்கள் இல்லாமல் பதிய முடியவில்லை.

இப்படியான காரணங்களால் பதிவு திட்டம் முழுமை பெறாது என்பது உறுதி. இந்த நிலையில் தான் எண்ணற்ற விவசாயிகள் பதிவு செய்ய இயலாது உள்ளனர் என்பதை அரசுகள் அறிய வேண்டும். எனவே ஒன்றிய அரசின் இந்த பதிவு திட்டம் நிச்சயமாக வெற்றி பெறாது.

இரு அரசுகளின் சலுகைகள், மானியங்கள் மற்றும் உரிமை திட்டங்கள் பதிவு செய்த நில உடமையாளர்களுக்கு மட்டுமே என்றால் பல லட்சக்கணக்கான விவசாயிகளுக்கு எந்த ஒரு திட்டமும் கிடைக்கப் பெறாத நிலைக்கு உள்ளாவார்கள். இதனால் சமூக பிரச்னைகள் ஏற்படும்.

எனவே, சாகுபடி செய்யும் விவசாயிகள் அனைவரையும் பதிவு செய்து.. அரசின் வேளாண் திட்டங்கள் அனைத்து விவசாயிகளுக்கும் சென்றடையும் நிலையில் இந்தத் திட்டத்தை செயல்படுத்திட வேண்டும் என தொடர்ந்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வலியுறுத்தி வருகிறது. ஆகவே, ஒன்றிய அரசு மற்றும் மாநில அரசு தற்போதைய நிலையில் பதிவு செய்யும் இந்த திட்டத்தை மறு ஆய்வு செய்திட  வேண்டும்.”  என்று பி.எஸ்.மாசிலாமணி கூறியுள்ளார். 

logo
Andhimazhai
www.andhimazhai.com