ஏ.சி.சண்முகம், வேலூர் மக்களவைத் தொகுதி பா.ஜ.க. அணி வேட்பாளர்
ஏ.சி.சண்முகம், வேலூர் மக்களவைத் தொகுதி பா.ஜ.க. அணி வேட்பாளர்

8 சாவடிகளில் மறு வாக்குப்பதிவு கேட்கும் ஏ.சி.சண்முகம்!

வேலூர் மக்களவைத் தொகுதியில் பா.ஜ.க. அணியில் போட்டியிட்ட ஏ.சி. சண்முகம் அங்கு 8 வாக்குச்சாவடிகளில் மீண்டும் வாக்குப்பதிவு நடத்தவேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார். 

இதுதொடர்பாக தமிழ்நாட்டின் தலைமைத் தேர்தல் அதிகாரிக்கு அவர் கடிதம் ஒன்றை  அனுப்பியுள்ளார். 

பீஞ்சமந்தி, தெண்டூர், தொங்குமலை, பேலம்பட்டு, ஜர்தான்கொல்லை ஆகிய மலை கிராமங்களில் வாக்காளர்கள் மிரட்டப்பட்டனர் என்றும் இந்த ஊர்களில் உள்ள 8 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு நடத்த வேண்டும் என்றும் அவர் தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கை வைத்துள்ளார். 

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com