சேலம் - அரசுப் பேருந்து விபத்தில் 8 பேர் பலி!

சேலம்- அரசுப் பேருந்து விபத்து
சேலம்- அரசுப் பேருந்து விபத்து
Published on

சேலம் அருகே இன்று நேர்ந்த சாலை விபத்தில் 8 பேர் உயிரிழந்தனர்.

இன்று காலையில் ஈரோட்டிலிருந்து சேலத்தை நோக்கி அரசுப் பேருந்து ஒன்று சென்றுகொண்டிருந்தது. அப்பேருந்து உத்தமசோழபுரத்தை அடுத்த சூளைமேடு பகுதியில் திடீரென கட்டுப்பாட்டை இழந்து எதிர்த்திசையில் வந்த சிறு வேன், ஒரு இருசக்கர வாகனம் ஆகியவற்றின் மீது மோதியது.

இதில் இருசக்கர வாகனத்தில் வந்த மணிகண்டன், அவரின் தாயார் இருசாயி இருவரும் அந்த இடத்திலேயே உடல் நசுங்கி இறந்துபோனார்கள். 

காயமடைந்தவர்களை அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மருத்துவமனை செல்லும் வழியிலும் அங்கு சென்றபின்னரும் வேனில் பயணித்த 11 மாத குழந்தை, 5 வயது குழந்தை, இரண்டு மாத கர்ப்பிணி சத்யா முதலிய 6 பேர் உயிரிழந்தனர். 

பேருந்து திடீரெனக் கட்டுப்பாட்டை இழக்கக் காரணம் என்ன, விபத்துக்கான காரணம் என்ன என்பது பின்னர்தான் தெரியவரும் என மாவட்ட ஆட்சியர் பிருந்தா தேவி சம்பவ இடத்தில் செய்தியாளர்களிடம் கூறினார்.  

logo
Andhimazhai
www.andhimazhai.com