நெல்லை, தென்காசியில் முகமூடி கும்பல் அரிவாள் வெட்டு - 8 பேர் படுகாயம்!

நெல்லை, தென்காசியில் முகமூடி கும்பல் அரிவாள் வெட்டு - 8 பேர் படுகாயம்!
Published on

தென்காசி மாவட்டம் நெட்டூர் கிராமத்தில் திருமண வீட்டில் நேற்று ஒரு கும்பல் புகுந்து அரிவாளால் கண்டபடி தாக்கியது. இதனால் அதிர்ச்சி அடைந்த மண விழா உறவினர்கள் அலறியடித்து ஓடினர். ஆனாலும் சிலர் சாப்பாட்டுக் கூடத்தில் வைக்கப்பட்டிருந்த நீண்ட கரண்டியை எடுத்து பதிலுக்கு தாக்கியும் தற்காத்துக்கொள்வதில் ஈடுபட்டனர்.

அதனால் தப்பியோடிய அந்த கும்பல், செல்லும் வழியில் நெல்லை மாவட்டம் தெற்குப்பட்டியில் இதேபோல மக்களைத் தாக்கியதாகவும் கூறப்படுகிறது.

முன்னரே, இந்த குமல் தெற்குப்பட்டியில் தாக்கிவிட்டுத்தான் நெட்டூருக்கு வந்ததாக இன்னொரு தகவலும் கூறப்படுகிறது.

அரிவாள் வெட்டில் காயம் அடைந்த எட்டு பேர் நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டுள்ளனர்.

சிகிச்சை பெற்றுவருவோரை மார்க்சிஸ்ட் கட்சியின் தலைவர் கனகராஜ் முதலிய பலரும் நேரில் சென்று நலம்விசாரித்தனர்.

logo
Andhimazhai
www.andhimazhai.com