தமிழ் நாடு
பன்னாட்டுத் தமிழ் உறவு மன்ற அமைப்பாளர் வா.மு.சேதுராமன் காலமானார். மூப்பு காரணமாக 90 வயதில் அவர் சென்னையில் நேற்று இரவு இறந்துபோனார்.
முதலமைச்சர் ஸ்டாலின், ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, பா.ம.க. தலைவர் அன்புமணி உட்பட பல தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
மறைந்த சேதுராமன், பல்வேறு நாடுகளுக்கும் சென்று தமிழ் அமைப்புகளின் நிகழ்ச்சிகளில் பங்கேற்று உரையாற்றி புகழ் பெற்றவர்.
முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிக்கு மிகவும் அணுக்கமான தமிழ்ப் புலவர்களுள் ஒருவர்.
கருணாநிதியைப் பற்றிப் புகழ்ந்து கலைஞர் காவியம் என தனி நூலே வெளியிட்டுள்ளார்.
தமிழக அரசின் கலைமாமணி விருதையும் தி.மு.க.வின் முரசொலி அறக்கட்டளை விருதையும் பெற்றுள்ளவர் என்பது குறிப்பிடத்தக்கது.