தமிழ் நாடு
தமிழ்நாட்டில் நடந்துமுடிந்த பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் ஒட்டுமொத்த அளவில் 94.56 சதவீதம் பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர்.
அரசுப் பள்ளி மாணவர்களில் 91.02% பேரும்,
அரசு உதவி பெறும் பள்ளிகளில் 95.49% பேரும்,
தனியார் பள்ளிகளில் 96.7% பேரும்
பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டில் 0.53 % அளவுக்கு தேர்ச்சி கூடியுள்ளது. 2023ஆம் ஆண்டில் 94.03% பேர் தேர்ச்சி பெற்றிருந்தநிலையில், நடப்பாண்டில் 94.56% பேர் தேர்ச்சி அடைந்திருக்கின்றனர்.
பெண்கள் பள்ளிகளில் 96.39% பேரும், இரு பாலர் பள்ளிகளில் 94.7% பேரும் ஆண்கள் பள்ளிகளில் 88.98% பேரும் தேர்ச்சி அடைந்துள்ளனர்.