இலங்கை சிறையில் 99 தமிழக மீனவர்கள்… தொடரும் கைது நடவடிக்கை!

இலங்கை சிறையில் 99 தமிழக மீனவர்கள்… தொடரும் கைது நடவடிக்கை!

Published on

ராமேசுவரம் பகுதியைச் சேர்ந்த 8 மீனவர்கள் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர். இதன் மூலம் கடந்த 70 நாள்களில் மட்டும் 346 தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்யதுள்ளது.

வங்க கடலில் சூறைக் காற்று காரணமாக மீன்பிடிக்கச் செல்ல விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டதையடுத்து, 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் நேற்று மீன்பிடிக்கச் சென்றனர்.

இந்த நிலையில், தலைமன்னார் - தனுஷ்கோடி கடல் பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த மீனவர்களை தடுத்து நிறுத்திய இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி, 1 விசைப்படகையும் அதில் பயணித்த 8 மீனவர்களையும் சிறை பிடித்துச் சென்றுள்ளனர். அவர்களை இலங்கை கடற்படை முகாமுக்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக மீனவர்கள் தொடர்ந்து இலங்கை கடற்படையால் கைது செய்யப்படும் நடவடிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது. கடந்த 70 நாள்களில் மட்டும் 346 தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. கைதான தமிழக மீனவர்களில் இதுவரை 99 பேர் இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 13 பேர் இரண்டு ஆண்டு சிறைதண்டனையுடன் இலங்கை வெளிக்கடை சிறையில் உள்ளனர்.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram

logo
Andhimazhai
www.andhimazhai.com