முதலமைச்சரிடம் வாழ்த்துப் பெறும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
முதலமைச்சரிடம் வாழ்த்துப் பெறும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

ஆளுநர் பற்றிய புத்தகம்... அப்பாவிடம் ஆசிபெற்ற உதயநிதி!

தமிழக விளையாட்டுத் துறை அமைச்சரும் தி.மு.க. இளைஞரணிச் செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் இன்று தன்னுடைய 46ஆவது பிறந்தநாளைக் கொண்டாடும் நிலையில், தனது தந்தையும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின், தாய் துர்கா இருவரையும் சந்தித்து வாழ்த்து பெற்றார்.

தயாரிப்பாளர், நடிகர் என திரைத்துறையின் மூலம் மக்கள் மத்தியில் அறிமுகமாகி, தி.மு.க. இளைஞரணிச் செயலாளர், விளையாட்டு மேம்பாடு- இளைஞர் நலம்- சிறப்புத் திட்டச் செயலாக்கத் துறை அமைச்சராக அரசியலில் பயணித்து வருபவர் உதயநிதி ஸ்டாலின். கடந்த 1977 ஆம் ஆண்டு நவம்பர் 27 ஆம் தேதி பிறந்த இவர் இன்று தன்னுடைய 46 ஆவது பிறந்த நாளை பெரிய அளவில் கொண்டாடி வருகிறார். உதயநிதி ஸ்டாலினுக்கு நேற்றுமுதலே பிரமுகர்கள் பலரும் வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகிறார்கள்.

இந்த நிலையில் தன்னுடைய பிறந்தநாளை முன்னிட்டு தனது தந்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தாய் துர்கா ஸ்டாலினை சந்தித்து உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து பெற்றார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பிறந்தநாள் கொண்டாடும் உதயநிதி ஸ்டாலினுக்கு பொன்னாடை போர்த்தி புத்தகம் வழங்கி தன்னுடைய வாழ்த்தை தெரிவித்தார். இதுகுறித்து புகைப்படங்களுடன் உதயநிதி ஸ்டாலின் எக்ஸ் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளதாவது:

"எனது பிறந்த நாளை முன்னிட்டு, ஈன்றெடுத்த பெற்றோர் கழகத்தலைவர் - மாண்புமிகு முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்களிடமும் - அன்னையார் அவர்களிடமும் இன்று காலை வாழ்த்துகளைப் பெற்றேன். அயராது உழைக்கவும் - அன்பின் வழி நடக்கவும் எந்நாளும் வழிநடத்தும் தாய் - தந்தையரின் வாழ்த்தை பெற்ற மகிழ்வான தருணத்திலிருந்து இந்த நாளை தொடங்குவதில் மகிழ்ச்சி கொள்கிறேன்." என்று அவர் குறிப்பிட்டு உள்ளார்.

அமைச்சர் உதயநிதி மூத்த வழக்கறிஞர் சிகரம் ச.செந்தில்நாதன் எழுதிய "குடியரசுத் தலைவர் - ஆளுநர் அதிகாரங்கள் அரசமைப்புச் சட்ட நிர்ணய அவை விவாதங்கள்" என்ற புத்தகத்தை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வழங்கினார்.

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com