மாதிரிப்படம்: துப்பாக்கி குண்டு
மாதிரிப்படம்: துப்பாக்கி குண்டு

பெண் விமான பயணியிடம் துப்பாக்கிக் குண்டு பறிமுதல்!

சென்னை விமான நிலையத்தில் பெண் பயணி ஒருவரிடமிருந்து துப்பாக்கி குண்டு பறிமுதல் செய்யப்பட்டிருக்கும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை விமான நிலையத்தில் ஹைதராபாத் செல்ல வந்த பெண் பயணியிடம் மத்திய தொழில் பாதுகாப்புப் படையினர் சோதனை நடத்தினர். அப்போது அந்தப் பெண்ணிடமிருந்து 9 மி.மி. துப்பாக்கிக் குண்டு கண்டுபிடித்து போலீசார் பறிமுதல் செய்தனர்.

பின்னர் அந்தப் பெண்ணிடம் நடத்தப்பட்ட விசாரணையில், துப்பாக்கிக் குண்டை அந்தப் பெண் தவறுதலாக எடுத்து வந்துவிட்டதாகக் கூறியுள்ளார்.

அதேபோல், கடந்த அக்டோபர் மாதம், சென்னையில் இருந்து விசாகப்பட்டனம் புறப்பட்ட விமானத்தில் எமினா என்ற பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்த பெண்ணிடமிருந்து ஒரு துப்பாக்கி குண்டு கைப்பற்றப்பட்டது.

சென்னை விமான நிலையத்தில் பெண் பயணிகளிடமிருந்து துப்பாக்கிக் குண்டு பறிமுதல் செய்யப்படுவது கவனத்துக்குறியது.

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com