மகாத்மா காந்தி அவர்களின் பெயரை அழித்து விட்டு புதிய சட்டம், புதிய திட்டம் செயல்படுத்துவோம் என்பது காந்தியடிகளைக் கொலை செய்ததைவிடக் கொடிய செயல் என முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் குற்றம்சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக அவர் தன்னுடைய சமூக ஊடகப்பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது: “மகாத்மா காந்தி அவர்களின் பெயரை அழித்து விட்டு புதிய சட்டம், புதிய திட்டம் செயல்படுத்துவோம் என்பது காந்தியடிகளைக் கொலை செய்ததைவிடக் கொடிய செயல்
காந்தியடிகளின் மீது அவர்களுக்கு எவ்வளவு வெறுப்பு, எவ்வளவு காழ்ப்புணர்வு என்பதை இந்த ஒரு செயலே அம்பலப்படுத்துகிறது
காந்தியடிகளின் பெயரையும் நினைவையும் அழித்து விட்டு யாரைத் தேசப் பிதாவாக இவர்கள் முன்னிறுத்துவார்கள் என்பதை உங்கள் கற்பனைக்கு விடுகிறேன்
இந்தியாவின் வரலாறு 2014 ஆம் ஆண்டிலே தான் தொடங்கியது என்று பறைசாற்றியவர்கள் இன்னும் எத்தனை கொடுமைகளச் செய்வார்கள் என்று பார்க்கலாம்
தென்னாட்டைப் பின்பற்றி வடநாடு ஒரு நாள் திரும்பும் என்ற நம்பிக்கையில் இந்த நாட்டின் எளிய மக்கள் வாழ்கிறார்கள்