இடியாப்பம் விற்பனை செய்ய இனி உரிமம் கட்டாயம்!

இடியாப்பம்
இடியாப்பம்
Published on

சைக்கிள், பைக்குகளில் இடியாப்பம் விற்பனை செய்பவர்கள் இனி உரிமம் பெற வேண்டும் தமிழ்நாடு உணவுப் பாதுகாப்புத்துறை தெரிவித்துள்ளது.

தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் காலை வேளைகளில் சைக்கிள் மற்றும் பைக்குகளில் இடியாப்பம் விற்பனை செய்வார்கள். இடியாப்பம்தான் பெரும்பாலான குழந்தைகள் மற்றும் முதியோர்களுக்கு காலை உணவாக உள்ளது.

ஒரு சில இடங்களில் தரம் குறைந்த இடியாப்பங்கள் விற்பனை செய்வதாக உணவுப் பாதுகாப்புத்துறைக்குத் தகவல் கிடைத்தது.

இந்த நிலையில், சைக்கிள் மற்றும் பைக்குகளில் இடியாப்பம் விற்பனை செய்பவர்கள் இனி உரிமம் பெற வேண்டும் என உணவுப் பாதுகாப்புத்துறை உத்தரவிட்டுள்ளது.

மேலும், உணவுப் பாதுகாப்புத்துறையின் வழிகாட்டுதலின் படி இடியாப்பங்கள் தயாரிக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இடியாப்பங்கள் தயாரிப்பதற்கான உணவுப் பாதுகாப்பு உரிமத்தை இணையத்தில் இலவசமாக பெற்றுக்கொள்ளலாம் எனவும், ஆண்டுக்கு ஒருமுறை புதுப்பிக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காய்ச்சல், தொற்றுப்பாதிப்பு உள்ளவர்கள் இடியாப்ப விற்பனையில் ஈடுபட வேண்டாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

logo
Andhimazhai
www.andhimazhai.com