பாஜக தமிழகத் தலைவர் அண்ணாமலை
பாஜக தமிழகத் தலைவர் அண்ணாமலை

அண்ணாமலை தலைமையில் 5ஆம் தேதி பா.ஜ.க. நிர்வாகிகள் கூட்டம்!

சென்னையில் வரும் 5 ஆம் தேதி அண்ணாமலை தலைமையில் பா.ஜ.க. மாநில நிர்வாகிகள் கூட்டம் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அ.தி.மு.க.- பா.ஜ.க. கூட்டணி முறிந்ததைத் தொடர்ந்து தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை தலைமையில் கட்சியின் மாநில, மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் இன்று காலை நடைபெறுவதாக இருந்தது. ஆனால், பாஜக தலைவர்களைச் சந்திக்க அண்ணாமலை நேற்று முன் தினமே டெல்லி சென்றதால், அவர் இல்லாமலேயே கூட்டம் இன்று நடைபெற்றது.

இந்த கூட்டத்தில், பா.ஜ.க. மேலிடப் பொறுப்பாளர் சுதாகர் ரெட்டியுடன் கேசவ விநாயகம், வி.பி.துரைசாமி, கருநாக ராஜன் ஆகியோர் கலந்துகொண்டனர். இந்தக் கூட்டமானது சுமார் 2 மணி நேரம் நடைபெற்றது.

இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சுதாகர் ரெட்டி, இன்றைய ஆலோசனைக் கூட்டத்தில் கூட்டணி குறித்து எதுவும் பேசப்படவில்லை என்றும், கூட்டணி தொடர்பாக பா.ஜ.க. தலைமைதான் முடிவு செய்யும் என்றும் தெரிவித்தார்.

கட்சியின் அமைப்பு ரீதியான செயல்பாடுகள் குறித்து இன்றைய கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டதாக குறிப்பிட்ட அவர், தமிழகத்தில் அமைப்பு ரீதியாக பா.ஜ.க. பூத் கமிட்டி அளவில் வளர்ந்து வருகிறது என்று தெரிவித்தார்.

பா.ஜ.க. மாநிலத் தலைவர் அண்ணாமலை தலைமையில் நாளை மறுநாள் பா.ஜ.க. மாநில நிர்வாகிகள் கூட்டம் நடைபெறும் என்று அக்கட்சியின் மாநில துணைத்தலைவர் கரு.நாகராஜன் தெரிவித்தார்

டெல்லி சென்றுள்ள அண்ணாமலை இன்று அல்லது நாளை சென்னைக்குத் திரும்புவார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com