முதலமைச்சர் அறிவித்த பால் கொள்முதலுக்கான விலை உயர்வு போதுமானதாக இல்லை என்று பா.ம.க தலைவர் அன்புமணி கூறியுள்ளார்.
சட்டப்பேரவையில் இன்று பேசிய முதலமைச்சர் விஜய், கொள்முதல் செய்யப்படும் பால் விலை ஒரு லிட்டர் ரூ. 38இலிருந்து ரூ. 41 ஆக உயர்த்தப்படும் என்று அறிவித்தார். இந்த 3 ரூபாய் பால் கொள்முதல் விலை உயர்வு போதுமானதல்ல என்று பா.ம.க தலைவர் அன்புமணி கூறியுள்ளார்.
இதுகுறித்து இன்று வெளியிட்டுள்ள சமூக ஊடகப் பதிவில்,
"பால் கொள்முதல் விலை உயர்வு வரவேற்கத்தக்கது என்றாலும் இது போதுமானது அல்ல. தமிழ்நாட்டில் பால் கொள்முதல் விலை கடந்த 4 ஆண்டுகளாக உயர்த்தப்படாததாலும், தனியார் நிறுவனங்கள் ஆவின் கொள்முதல் விலையை விட லிட்டருக்கு ரூ.12 வரை கூடுதலாக வழங்குவதாலும் ஆவின் பால் கொள்முதல் விலையை லிட்டருக்கு குறைந்தது ரூ.10 உயர்த்தி வழங்க வேண்டும். அந்த அளவுக்கு உயர்த்த முடியாவிட்டாலும் குறைந்தது லிட்டருக்கு ரூ.7 அளவுக்காவது உயர்த்த அரசு முன்வர வேண்டும்." என்று அன்புமணி கூறியுள்ளார்.