ஆவின் பால் பொருட்களின் விலை திடீர் உயர்வு!

Aavin milk Products
ஆவின் பால் உபபொருட்கள்
Published on: 

ஆவின் பால் உபபொருட்களின் விலையில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன் மூலம் கிடைக்கும் கூடுதல் வருவாயில் 90%க்கும் அதிகமான தொகை பால் உற்பத்தியாளர்களின் நலனுக்காக வழங்கப்படும் என்று ஆவின் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து ஆவின் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

"பால் உற்பத்தியாளர்களுக்கு அவர்களின் உற்பத்திக்கு ஏற்ப நியாயமான கொள்முதல் விலை கிடைப்பதை உறுதிசெய்வது அரசின் கடமையாகும்.

தற்போதைய சந்தைச் சூழலில், தனியார் பால் நிறுவனங்கள், பிற மாநிலக் கூட்டுறவு பால் நிறுவனங்களின் ஒத்த வகையான பொருட்களின் விலைகள், உற்பத்திச் செலவுகள் ஆய்வு செய்யப்பட்டுள்ளன.

இதன் அடிப்படையில் அதிகரித்துவரும் உற்பத்திச் செலவுகளைக் கருத்தில்கொண்டு, ஆவின் பால் உபபொருட்களின் விலைகளில் குறைந்த அளவிலான விலைத் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

விலை உயர்விற்குப் பின்னரும், பிற கூட்டுறவு, தனியார் நிறுவனங்களின் பொருட்களுடன் ஒப்பிடுகையில், ஆவின் உபபொருட்களின் விலை தொடர்ந்து குறைவாகவே உள்ளது. இந்த நடவடிக்கை எவ்வித லாப நோக்கமும் இன்றி, உற்பத்திச் செலவுகளை ஈடுசெய்வதற்கும். சந்தையில் ஆவின் பொருட்களின் போட்டித் தன்மையைத் தொடர்ந்து நிலைநிறுத்துவதற்கும், பால் உப பொருட்களின் குறைந்த அளவு விலை திருத்தம் அவசியமானதாகும்.

ஆவின் மேற்கொண்டுள்ள இந்த விலைத் திருத்தம் அதிகரித்து வரும் உற்பத்திச் செலவுகளைக் கருத்தில் கொண்டு, பால் உற்பத்தியாளர்களின் நலனைப் பாதுகாப்பதற்கும். நுகர்வோருக்கு தரமான பால் உபபொருட்களை நியாயமான விலையில் தொடர்ந்து வழங்குவதற்கும் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையாகும்." என்று ஆவின் நிறுவனம் தெரிவித்துள்ளது.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடர: Facebook, Twitter, Youtube, Instagram

logo
Andhimazhai
www.andhimazhai.com