திசா மிட்டல் - தீபா சத்யன்
திசா மிட்டல் - தீபா சத்யன்

2 போலீஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம் - ஏ.ஆர்.ரகுமான், அண்ணாமலை விவகாரங்கள் எதிரொலி

தலைநகர் சென்னையில் ஒரே நாளில் இரண்டு காவல்துறை அதிகாரிகள் அதிரடியாக மாற்றப்பட்டு, காத்திருப்பில் வைக்கப்பட்டுள்ளனர். சென்னை, நுங்கம்பாக்கத்தில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை நேற்று சாலை மறியல் செய்தபோது, அவரைக் கைதுசெய்யாமல் கலைந்துசெல்ல காவல்துறை அனுமதி அளித்தது. இந்தநிலையில், கிழக்கு சென்னை இணை ஆணையர் திஷா மிட்டல் மாற்றப்பட்டுள்ளார். இதைப்போல, பழைய மகாபலிபுரம் சாலையில் பனையூர் அருகில் நடைபெற்ற ஏ.ஆர்.ரகுமான் இசைக் கச்சேரியால் சாலைப் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வாகனங்களில் கடும் அவதிக்கு ஆளாகினர். அதைத் தொடர்ந்து, அந்தப் பகுதி தொடர்புடைய பள்ளிக்கரணை துணை ஆணையர் தீபா சத்யனும் மாற்றப்பட்டு இன்று காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டார்.   

logo
Andhimazhai
www.andhimazhai.com