நடிகர் கார்த்திக்
நடிகர் கார்த்திக்

அ.தி.மு.க.வை ஆதரித்து நடிகர் கார்த்திக் ஒரு வாரம் பிரச்சாரம்!

காலஞ்சென்ற நடிகர் முத்துராமனின் மகனும் நடிகருமான கார்த்திக் இந்தத்தேர்தலில் அ.தி.மு.க.வுக்கு ஆதரவாகப் பிரச்சாரம் செய்யவுள்ளார் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

1980, 90-களின் திரைப்பட நாயகனான கார்த்திக், 2009ஆம் ஆண்டில் அகில இந்திய நாடாளும் மக்கள் கட்சி என புதிய கட்சியை அறிவித்தார். இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு அ.தி.மு.க.வுடன் கூட்டணி வைத்தது. ஆனால் அந்தக் கட்சிக்குப் போட்டியிட வாய்ப்பில்லை என அ.தி.மு.க. கூறிவிட்டதால் கார்த்திக் கட்சி தனித்துப் போட்டியிட்டது.

பெரிதாக யாரும் வாக்குகளைப் பெறாத நிலையில், கார்த்திக்கையே அந்தக் கட்சியிலிருந்து நீக்கியதாக நிர்வாகிகள் அறிவித்தார்கள். 

அதைத்தொடர்ந்து 2018ஆம் ஆண்டில் கட்சியின் பெயரை மனித உரிமை காக்கும் கட்சி என அறிவித்தார், கார்த்திக். தேர்தல் வரும் நேரங்களில் அரசியல் களத்துக்கு வரும் கார்த்திக், இந்த முறை அ.தி.மு.க.வுக்கு ஆதரவாக வரும் 9ஆம்தேதி முதல் ஒரு வாரத்துக்குப் பிரச்சாரம் செய்யவுள்ளார். 

மதுரை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை, நெல்லை, விருதுநகர், திருச்சி, கோவை ஆகிய தொகுதிகளில் கார்த்திக் பிரச்சாரம் செய்வார் என அ.தி.மு.க. தலைமைக்கழகம் அறிவித்துள்ளது.  

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com