மக்களே நீங்க சொல்லுங்க... ராகவா லாரன்ஸ் 'பொசுக்’!

ராகவா லாரன்ஸ்
ராகவா லாரன்ஸ்
Published on

திருச்சி கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியிடுவது குறித்த அறிவிப்பை வெளியிடுவதாக நடிகர் ராகவா லாரன்ஸ்திடீர் அறிவிப்பை வெளியிட்டார். அதன்படி நேற்று அவர் பொதுவெளியில் அறிவிப்பை வெளியிடுவதாக இருந்தது.

பல்வேறு தரப்பினர் விஜய் கட்சியில் இணைந்துவரும் நிலையில், திரையுலகிலிருந்து மேலும் ஒரு நடிகர் அக்கட்சியில் சேரப்போகிறார் எனப் பரபரப்பு எழுந்தது.

பல தரப்பினரும் லாரன்ஸ் என்ன சொல்லப் போகிறார் என ஆவலோடு எதிர்பார்த்திருந்தனர்.

இதனிடையே, இயக்குநர் பாரதிராஜாவின் மறைவு காரணமாக அறிவிப்பை அவர் இன்றைக்குத் தள்ளிவைத்தார். 

இன்று முற்பகலில் தன் சமூக ஊடகப் பக்கங்களில் 18 நிமிட காணொலியை லாரன்ஸ் வெளியிட்டுள்ளார். அதில், திட்டவட்டமாக தன்னுடைய முடிவு எதையும் அவர் தெரிவிக்கவில்லை.

”மக்களே நீங்கள் கருத்து சொல்லுங்கள். நீங்கள் ஆம் என்றால் அரசியலுக்கு வருகிறேன். வேண்டாம் என்றால் விட்டுவிடுகிறேன். உங்களின் கருத்தின்படி முடிவெடுக்கிறேன். என்னுடைய எப்போது தெரிவிப்பேன் என்பதை விரைவில் அறிவிக்கிறேன்.” என்று இராகவா லாரன்ஸ் அதில் குறிப்பிட்டுள்ளார்.

முன்னர், நடிகர் இரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதாகப் பேசப்பட்ட காலத்தில் இப்படித்தான் அறிவிப்புபோல தகவல்களை வெளியிட்டுவிட்டு, பிறகு திடமான முடிவு எதையும் கூறமாட்டார். அவரைத் தன் தலைவர் எனக் கூறும் லாரன்சும் அதே பாணியைப் பின்பற்றுகிறார் என விமர்சனம் எழுந்துள்ளது.

logo
Andhimazhai
www.andhimazhai.com