"கனவை சொல்லுங்கள் நிறைவேற்றுகிறோம் என்கிறார் மு.க.ஸ்டாலின். எனக்கு நடிகை*** வேணும்… கனவ நிறைவேத்துவாரா?" என அதிமுக அமைச்சர் சிபி சண்முகம் சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளார்.
தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு முற்றிலும் சீர்குலைந்து விட்டதாகவும், பெண்களுக்கு பாதுகாப்பற்ற சூழல் நிலவுவதாகவும் கூறி, திமுக அரசுக்கு எதிராக தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் மாநிலம் முழுவதும் இன்று கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.
இந்த நிலையில், விழுப்புரத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு பேசிய அதிமுக எம்.பி. சி.வி.சண்முகம், “அப்துல் கலாம் கனவு காணுங்கள் என்று சொன்னார். இவர் (முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்) அதைவிட ஒருபடி மேலே போய், உங்கள் கனவை சொல்லுங்கள் நிறைவேற்றுகிறோம் என்கிறார். எனக்கு நடிகை*** வேண்டும். கனவை நிறைவேற்றுவாரா? ”என்று சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளார்.