சமூக நீதித் துறைக்கு பழைய பெயரையே வையுங்க- திருமாவளவன் சொல்கிறார்

தொல். திருமாவளவன்
தொல். திருமாவளவன்
Published on: 

சமூக நீதித் துறைக்கு பழைய பெயரையே வைக்கவேண்டும் என்பதுதான் வி.சி.க.வின் நிலைப்பாடு என அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்.

திருச்சியில் கூட்டம் ஒன்றில் பேசுகையில் அவர் இதை வலியுறுத்தியுள்ளார்.

“விஜய் அரசு பதவியேற்றபோது, சமூகநீதித் துறை என மாற்றியது எங்களுக்கே அதிர்ச்சியாக இருந்தது. நாங்கள் இப்படி பெயரை வைக்கும்படி எதுவும் சொல்லவில்லை. ஏற்கெனவே இருந்தபடி, துறையின் பெயரை ஆதிதிராவிடர் நலத் துறை என மாற்றவேண்டும் என்பதுதான் எங்கள் நிலைப்பாடு. இதில் எங்களுக்கு எந்த மாற்றுக்கருத்தும் இல்லை.” என்று திருமா கூறினார். 

logo
Andhimazhai
www.andhimazhai.com